Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்த பின்…. 3 1/2 வயது சிறுவனுக்கு நடந்த சோகம்… கதறி அழுத பெற்றோர்…

3 வயது சிறுவன் மூளை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிசநல்லூர் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிற்றரசன் என்ற 3 1/2 வயது சிறுவனும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சக்தி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிற்றரசனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுவனுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சிறுவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாக கூறி அந்த மருத்துவமனையில் டாக்டர்கள் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். 3 வயது சிறுவன் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |