Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதை செய்ய முயன்ற போது… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மின்கசிவு காரணமாக வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதிகத்தூர் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ் என்ற 7 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் குளியல் அறைக்கு சென்ற சிறுவன் அவினாஷ் அங்கிருந்த பாத்திரத்தின் மீது ஏறி நின்று வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டதால் வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் இருந்து மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்துவிட்டது.

இதனால் அவினாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |