மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வாலாஜா பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளான். இந்நிலையில் செல்வநாதன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியின் சுவிட்சை போட முயற்சி செய்த போது, எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.
இதனால் மயங்கி விழுந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.