Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாஞ்சாவடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரி, சந்தீப் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா இறந்துவிட்டதால் மணிகண்டன் தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சந்தீப் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |