விளையாடிக் கொண்டிருந்த போது பூச்சி கடித்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிதிஷ், தேவஸ்ரீ, ஹரிஷ் என்ற 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் 3 குழந்தைகளும் அங்கிருந்த களத்து மேட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஹரிஷை ஏதோ பூச்சி கடித்துள்ளது.
இதனால் வலி தாங்க முடியாமல் ஹரிஷ் சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து ரமேஷும், மாரியம்மாளும் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.