கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக சானிடைசர் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற 13 வயதுடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவர்கள் அனைவரும் கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக மண் சட்டியை எடுத்து வந்துள்ளனர்.
அதன் பிறகு ஸ்ரீராம் சானிடைசர் ஊற்றி தீ பற்ற வைக்க முயற்சி செய்த போது திடீரென சிறுவன் மீதும் தீப்பற்றி விட்டது. இதனால் தீ காயங்களுடன் இருந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.