உறவினருடன் குளிக்கச் சென்ற போது சிறுவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்.கே.பேட்டை பகுதியில் மோகன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது உறவினர்களுடன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து முடித்து அவர்கள் திரும்பி வரும்போது நந்தகுமார் என்ற சிறுவன் தவறி மீண்டும் கிணற்றில் விழுந்துவிட்டான்.இதனால் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.கே பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.