ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரபல நடிகர் விவேக் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதாவது நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணத்தினாலேயே மரக்கன்றுகளை நட்டு பல்வேறு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சர்வேஷ் ரகுபதி என்ற சிறுவன் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நட்டு வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் நடிகர் விவேக்கின் நினைவாக சிறுவன் மரக்கன்று நட்டுவைத்த சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.