Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்ததுக்கு இப்படியா…? நாடகமாடிய தாய் மாமா… நீலகிரியில் பரபரப்பு…!!

கிண்டல் செய்ததால் சிறுவன் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜீவன் ஸ்ரீ என்ற மகன் இருந்துள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் சிறுவன் தனது பாட்டியான ஜானகியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் மாமாவான விஜயகுமார் என்பவர் ஜீவன் ஸ்ரீ கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை அழைத்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறுவன் ஜீவன் ஸ்ரீ தனது தாய்  மாமாவான விஜயகுமாரை கிண்டல் செய்ததோடு, தனது மாமாவின் தவறை ஜானகியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயகுமாரை சிறுவன் மீண்டும் கிண்டல் செய்த போது கோபமடைந்த அவர் கீழே கிடந்த கம்பியால் சிறுவனின் கழுத்து, தலை போன்ற இடங்களில் சரமாரியாக அடித்துள்ளார். அதன் பிறகு காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால் சிறுவன் படுகாயம் அடைந்ததாக கூறி விஜயகுமார் நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |