Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. சிறுவன் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |