Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் படிக்க மாட்டேன்” சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தகுமார் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பெற்றோர் வசந்தகுமாரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஓசூர் டவுன் காவல் துறையினர் வசந்தகுமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |