குளிர்பானம் அருந்திய இரு சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடேசன் தெருவில் மாநகரப் பேருந்து ஓட்டுநரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமன் சாய் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் திருவெற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் செந்தில்குமாரின் தங்கை மகனான 4-ஆம் வகுப்பு படிக்கும் ஓமேஷ்வரன் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளான். இந்த இரு சிறுவர்களும் அருகில் இருக்கும் ரமேஷ் என்பவரின் கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர்.
இதனையடுத்து சிறிது நேரம் கழித்து இரு சிறுவர்களும் திடீரென இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இரண்டு சிறுவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பிறகு இரு சிறுவர்களின் ரத்த மாதிரிகளையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.