ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வெளியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஊரடங்கு நேரத்தில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர்.
அதன்பின் காவல்துறையினர் அந்த சிறுவர்களை திருக்குறள் ஒப்புவிக்க வைத்ததோடு, தோப்புக்கரணம் போட வைத்தனர். இதனையடுத்து சிறுவர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, கைகளை நீட்டி ஊரடங்கு சமயத்தில் விதிமுறைகளை மீறி வீட்டிற்கு வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.