Categories
உலக செய்திகள்

உலகிலேயே குட்டி நாடு… இதன் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா…? யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்..!!

உலகிலேயே மிகச்சிறிய ராஜ்யம் இத்தாலியின் சர்டானியா மாகாணத்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ளது. இதன் பெயர் தவோலாரா. இதுகுறித்து இதில் பார்ப்போம்.

இந்த தீவு தான் உலகிலேயே மிகச் சிறிய நாடு என அழைக்கப்படுகிறது. இத்தாலிய நாட்டின் ஒரு பகுதியான இந்த தீவு வெறும் 5 கிலோ மீட்டர்தான் இருக்கும். இங்கு வெறும் 11 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்பது கூடுதல் தகவல். இந்த நாட்டின் மன்னர் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. இந்த மன்னரை. பார்க்க வேண்டுமெனில் எந்தவித முன் அனுமதியும் தேவையில்லை சுலபமாக அவரை சந்திக்க முடியுமாம்.

ஆடம்பரம் இன்றி இயல்பாக தோற்றமளிக்கும் மன்னர் அந்த தீவில் ஒரே ஒரு உணவு விடுதியின் உரிமையாளர். சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி ஓட்டுபவரும் அவர் தான்.மிகச் சிறிய தீவாக இருந்ததால் அது எப்படி நாடு என்று சொல்லலாம் என கேள்வி வரலாம். ஆனால் மன்னர் எந்தோனியோ பர்த்லியோனி தனது நாட்டைப் பற்றிய பெருமை படுத்துகிறார். உலகில் எந்த நாடுகளும் இதனை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த தீவில் உலகமெங்கிலும் இல்லாத தனிச்சிறப்பு கொண்ட ஆடுகளையும், கழுதைகளையும் பார்க்க மக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் அரசு, விக்டோரியா உலக மன்னர்கள் அனைவரின் புகைப்படத்தையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு உலகம் முழுவதும் பயணம் செய்த கப்பல் தாவோலாரா என்ற மன்னரின் புகைப்படத்தையும் பெற்றது. இன்றுவரை இங்கிலாந்தின் அரண்மனையில் இந்த சிறிய நாட்டின் மன்னரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |