திருமணம் செய்ய ஆசைப்பட்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் ஜெயவேல் திருமணம் செய்யும் நோக்கத்தோடு அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.