Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவன்தான் இப்படி பண்ணிருக்கான்… விசாரணையில் தெரிந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்ற மரம் வெட்டும் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தனது உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த  சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விக்னேஸ்வரன் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றது உறுதிபடுத்தப்பட்டது. அதன் பின் தலைமறைவாக இருந்த விக்னேஸ்வரனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |