Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டை விரட்டி கொண்டே ஓடிய சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு பூனம்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெற்றிவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் இவர்களுடைய மூத்தமகள் ஜோஷினி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ஆம்வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி ஜோஷினி தோட்டத்திற்கு சென்றபோது, ஆட்டை விரட்டி கொண்டே ஓடியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, ஜோஷினி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |