விளையாடிக்கொண்டிருந்த போது மழை நீர் தேங்கிய குழிக்குள் விழுந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியில் கண்ணன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய சாதனா என்ற பெண்குழந்தை இருந்துள்ளது. இந்த சிறுமி தனது வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவறை கட்டுவதற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த மழை நீர் தேங்கிய குழிக்குள் சிறுமி தவறி விழுந்து விட்டார்.
இதனையடுத்து சாதனா மழைநீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.