Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற இளம்பெண்…. மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாரியமனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மலர் பிரசவத்திற்காக திருச்சி மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மலரின் தாயார் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில் ஜெயஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டிற்கு அருகில் இருக்கும் மழைநீர் தேங்கிய குட்டையில் ஜெயஸ்ரீ தவறி விழுந்து மூச்சு திணறி இறந்துவிட்டார். இதனையடுத்து காணாமல் போன ஜெயஸ்ரீயை அனைவரும் தேடி அலைந்துள்ளனர். அப்போது குட்டையில் ஜெயஸ்ரீ இறந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |