Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கற்றாழை ஜூசுக்கு சண்டையா…? அதிர்ச்சியடைந்த தாயார்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் தொகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜபஸ்டிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் இவர்களது மூத்த மகள் ஜெபின் ஷா தலையில் தேய்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த கற்றாழை ஜூஸ் கீழே கொட்டி விட்டது. இதனால் அக்கா தங்கைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஜெபின் ஷா கோபத்தில் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்து விட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஜபஸ்டிபா உடனடியாக தனது மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெபின் ஷா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |