மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை வாசல் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மதுமிதா கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து தனது தாத்தா ஆறுமுகம் என்பவரது வீட்டிற்கு மதுமிதாவும், அவரது தாய் சகுந்தலாவும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அப்போது மதுமிதாவுக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.