Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சின்ன வயசிலிருந்து சேர்த்தது… சிறுவர்களின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக சிறுவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை கலெக்டரிடம் வழங்கியுள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு 3 சிறுவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக தங்களது உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அருவங்காடு பகுதியில் வசிக்கும் கௌஷிக், ஊட்டி நியூ லைன் பகுதியில் வசிக்கும் கீர்த்திகா மற்றும் ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் வசிக்கும் தர்ஷித் போன்ற சிறுவர்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் தங்களின் சேமிப்பு பணத்தை வழங்கியுள்ளனர். இவ்வாறு சிறு வயதிலேயே சிறுவர்களின் உதவும் மனப்பான்மை கண்டு அனைவரும் அவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |