சின்ன வெங்காயம் குறித்து பலரும் அறியாத மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு
சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை காட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடியது என பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் மருத்துவம் பயன்கள் நாம் அறியாத ஒன்று. சின்ன வெங்காயத்தை பற்றி சில குறிப்புகள். அவை
- வெங்காயச் சாறையும் சூடான தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் ஏற்பட்ட வலி நீங்கும்.
- ஒரு மாதம் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு மூளை வலிமை பெறும்.
- வெங்காயத்தில் இன்சுலின் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
- தலையில் அதிகப்படியான முடிகள் உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் வெங்காயத்தை வெட்டி தேய்த்துவர முடி வளரத் தொடங்கும்.
- வளர்பட்டை செடி சாரும் வெங்காயத்தின் சாறும் சம அளவு எடுத்து காதில் ஊற்ற காது வலி குணமடையும்.
- வெங்காயச் சாறினை மோரில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் சரியாகும்.