வெங்காயம் வரத்து குறைவு காரணமாக மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்னவெங்காயம் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு வீணானது. இதனால் சந்தைக்கு வழக்கமான அளவை விட தற்போது குறைவாக வந்துள்ளது. கடந்த மாதம் வரை சரிவாக காணப்பட்ட வெங்காயத்தின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவதால் இதன் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 130 க்கு விற்பனையாகிறது. சில்லறையில் 130முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனிடையே பெரிய வெங்காயத்தின் வரத்து வழக்கமான அளவிலிருந்து வருவதால் பெரிய வெங்காயத்தின் விலை 40 முதல் 45 ரூபாய்க்கு, சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.