சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று வார சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தையில் காய்கறி, பழங்கள் உட்பட பல பொருட்கள் விற்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த வார சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 130 வரை விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் வடமாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரவு குறைந்தது மட்டுமே என வியாபாரிகள் கூறுயுள்ளனர். மேலும் இது தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் காய்கறி விலையும் வாரச்சந்தையில் உயர்ந்துள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.