Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறிய பிரச்சனை… கொலையில் வந்து முடித்து… பிரியாணி கடைக்காரர் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்த பிரியாணி கடைக்காரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது சித்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் ரெடிமேடு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடைக்கு அடுத்ததாக முனீஸ்வரன்(32) என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு கடை ஒத்திக்கு வாங்குவதில் முன்விரோதம் ஏற்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது சித்திக் அவரது கடைக்கு எதிரே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முனீஸ்வரன் முகமது சித்திக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கிடையே நடந்த தகராறில் ஆத்திரமடைந்த முனிஸ்வரன் முகமது சித்திக் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் போலீசார் முனீஸ்வரனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |