Categories
பல்சுவை

குழந்தைகளின் விளையாட்டு காருக்கு இத்தனை லட்சமா….? ரோல்ஸ் ராய்ஸ் மதிப்ப பாருங்க…. வியந்து போயிருவீங்க….!!

உலக அளவில் பிரபலமான கார்களில் முதலிடத்தில் இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் இந்திய மதிப்பு 5 கோடியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த காருக்கு அதிகபட்ச விலை அதாவது முடிவு விலை என்பது கிடையாது. இதற்கு காரணம் வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப இந்த காரின் வசதியும் தோற்றமும் அடிக்கடி மாற்றப்படும். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இதன் கலர் தேர்வு செய்யப்படும். குறிப்பாக இந்த காரில் உள்ள பெரும்பாலான பகுதிகளை மனித கைகளைக் கொண்டே உருவாக்குகிறார்களாம். அதனால்தான் இந்த காருக்கு முடிவு விலை இல்லை என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் சின்ன குழந்தைகள் விளையாடுவதற்காக தான் பொதுவாக சின்ன கார்களை தயாரித்து கொண்டு வருகிறார்கள். இந்த சின்ன கார்களின் விலை குறைந்தபட்சமாக 10 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் வரை இருக்கும். அப்படி என்றால் 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுக் காரை பற்றி உங்களுக்கு தெரியுமா..? ஆமாம்… ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி உருவாக்குற விளையாட்டு காருக்கு தான் இவ்வளவு அதிக விலையாம். அப்படி இதில் என்ன உள்ளது என்று கேட்டால், ரோல்ஸ் ராயல்ஸ் காரோட ஒரிஜினல் பார்ட்ஸ் எல்லாம் இந்த சின்ன காரிலும் உள்ளதாம். இதற்காகத்தான் இந்த காரோட விலை இவ்வளவு அதிகமாம்.

Categories

Tech |