Categories
Tech

SmartPhone பயனாளர்களுக்கு…. கூகுள் நிறுவனம் புதிய அப்டேட்டுகள்…. இதோ முழு விபரம்…..!!!!!

கூகுள் நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் சில புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் போன்றவற்றில் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.
கூகுள் மெசேஜ்:
கூகுள் மெசேஜ்களில் வெளியான புதிய அப்டேட்டுகளின் அடிப்படையில் இனி ஐபோன் பயனர்களால் மெசேஜ்களில் அனுப்பப்படும் ரியாக்‌ஷன்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எமோஜியாக காட்டப்படும். அதேபோல் கூகுள் போட்டோகளின் லிங்கை மெசேஜ்ஜில் அனுப்பினால் அதில் உள்ள வீடியோக்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்ட ரெஷலியூஷனிலேயே காட்டப்படும்.
அதுமட்டுமல்லாமல் பயனாளர்களுக்கு தனிபட்ட முறையில் வரும் மெசேஜ்கள் தனியாகவும், மற்ற மெசேஜ்கள் பிஸ்னஸ் டேப்பிலும் தனித்தனியாக தொகுக்கப்படும். அதேபோல் ஒடிபி மேசேஜ்கள் தானாகவே 24 மணி நேரத்தில் அழிந்துவிடும். பயனாளர்கள் படிக்க மறந்த (அல்லது) கூடுதலாக வரும் மெசேஜ்களை நியாபகப்படுத்துவதற்கு தனி அம்சமும் இந்த புதிய அப்டேட்டில் இடம்பெறும். அதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட நினைவுப்படுத்தல்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபோர்ட்:
கூகுள் கீபோர்டில் கிராமர் கரக்‌ஷன் அம்சம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக நாம் டைப் செய்யும் வாக்கியங்களிலுள்ள இலக்கண பிழைகள் கண்டறிந்து காட்டப்படும். அதேபோன்று ஜிபோர்டில் 2000-க்கும் மேற்பட்ட புதிய எமோஜ்ஜிகள் ஸ்டிக்கர்களாக தரப்பட உள்ளது. பிக்சல் பயனர்கள் தாங்கள் டைப் செய்யும் வார்த்தைகளை வண்ணமயமான ஸ்டிக்கர்களாக ஜிபோர்ட் வாயிலாக மாற்றலாம்.
லைவ் டிரான்ஸ்கிரைப்:
நாம் பேசுவதை வார்த்தைகளாக மொழி பெயர்த்து தரும் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி இனிமேல் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிக்ஸல் மற்றும் சாம்சங் போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த அப்டேட்டை இனிமேல் மற்ற ஆண்ட்ராய்டு போன் பயனர்களும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதேபோன்று வைஃபை (அல்லது) டேட்டா இல்லாதவர்களும் லைவ் டிரான்ஸ்கிரைப்பை பயன்படுத்தும் அடிப்படையில் ஆஃப்லைன் மோடும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் போட்டோஸ்:
கூகுள் போட்டோஸில் புதிய போட்டோ பிளர் மோடை கூகுள் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சத்தின் வாயிலாக தங்கள் கேமரா செயலியில் போட்ரெய்ட் ஆப்ஷன் இல்லாத ஸ்மார்ட்போன் பயனாளர்களும் பிளர் செய்யப்பட்ட போட்டோக்களை எடுக்கலாம்.
ஆண்ட்ராய்டு டிவி:
கூகுள் ஆண்ட்ராய்டு டிவி-க்கும் புதிய அப்டேட்டை வழங்க இருக்கிறது. இதில் நமக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நாம் ஒரே ஒரு டச்சின் வாயிலாக ஹைலைட் செய்து வைத்துகொள்ள முடியும்.
கூகுள் அசிஸ்டெண்ட்:
கூகுள் நிறுவனம் தன் கூகுள் அசிஸ்டெண்ட் சேவையில் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்தும் அம்சத்தையும் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக கூகுள் அசிஸ்டெண்டில் வாய்ஸ் கமெண்ட் கொடுப்பது மூலமாக நாம் கூகுள் பேயில் இருந்து பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம். மேலும்  நமது பார்க்கிங் ஸ்டேட்டஸ் என்ன என்பதையும் சரிபார்த்து கொள்ளலாம்.
டிஜிட்டல் வெல் பீயிங்:
கூகுள் நிறுவனமானது ஸ்கிரீன் டைமை கணக்கிடும் புதிய விட்ஜெட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் வாயிலாக நாம் அதிகம் பயன்படுத்தும் 3 செயலிகளில் நாம் செலவிடும் நேரத்தை கணக்கிட முடியும். அதேபோல் நாம் செயலிகள், ஃபோக்கஸ் மோட், பெட் டைம் மோடுக்கும் டைமர் வைத்துக்கொள்ள முடியும்.
நியர்பை ஷேர்:
இறுதியில் கூகுள் நியர்பை ஷேர் என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் வாயிலாக நாம் விரும்பும் போட்டோ, வீடியோ, டாக்குமெண்டுகளை இனிமேல் ஒருவருக்கு மட்டும் இன்றி ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்ப முடியும். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு 6 மற்றும் அதற்கு அதிகமான ஓஎஸ்களில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |