Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் … விற்பனைக்கு தயார்நிலை ..!!

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான ஆர்வி 400 பைக்கை  விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மேலும் , அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி 400 பைக் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Image result for ஆர் வி 400 பைக்

இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, டேங்க் போன்ற வடிவமைப்பின் கீழ் பேட்டரி மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இதை ஒரு முறை சார்ஜி செய்தால் 156 கிமீ பயணிக்கும் வரை பயணிக்கலாம். இந்த மோட்டோ சைகிளில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்றத்தினை கொண்டுள்ளது.

 

Image result for ஆர் வி 400 பைக்

இதனுடன்  ஆர்.வி., 300 என்ற மற்றொரு மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,  ரிவோல்ட் நிறுவனம் சுலப தவணை திட்டத்தையும் இதனுடன் சேர்த்து அறிவித்துள்ளது. இந்த ஆர்.வி., 300 பைக்குக்கு, 2,999 ரூபாயும், ஆர்.வி., 400 பைக்குக்கு, 3,499 ரூபாயும் மாதத் தவணையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் ஆர்வி 300 பைக்கின் விலை ரூ.1,15,963 என்றும் ஆர்வி 400 பைக்கின் விலை ரூ.1,34,463 என அறிவித்துள்ளது. குறிப்பாக, இதன் பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் வாரண்டி தரப்பட்டுள்ளது.

Categories

Tech |