Categories
மாநில செய்திகள்

100 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்…. தொடரும் உதவிகள்…. Real Hero-வின் அசத்தல் செயல்…!!

மகாராஷ்டிராவில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

நடிகர் சோனு சூட் கொரோனா காலகட்டத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த குடி பெயர்ந்த தொழிலாளர்கள்,அவர்களது வீட்டிற்கு செல்ல இலவசப் பேருந்து ஏற்பாடு வசதி செய்து கொடுத்ததோடு, தனி விமானம் மூலமாகவும் சிலரை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அது மட்டுமின்றி ஸ்பெயினில் சிக்கிக் கொண்டிருந்த சென்னை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு விமான வசதியும் செய்து கொடுத்து,வறுமையில் வாடிய விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கியது போன்ற பல்வேறு உதவிகளை மக்களுக்கு சோனு சூட் செய்து வருகிறார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஆறு பள்ளிகளில் இருக்கும் 100 ஏழைமாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் இவ்வேளையில் அதில் பங்குகொள்ள முடியாத மாணவர்களுக்கு சோனு சூட் ஸ்மார்ட் போன்கள் வாங்கிக் கொடுத்துள்ளது பாராட்டிற்குரியது.

Categories

Tech |