Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசும் போது சிரிச்சீங்க… இன்னைக்கு மோடியே பேசுறாரு…. காலரை தூக்கிவிட்ட சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும்.

நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை விட்டுட்டு போவீங்க ? நீரை உறிஞ்சி விக்குறீங்க. நான் ஆட்சிக்கு வந்தா தடை போட்டுருவேன்,  நீர்த்தேக்கத்தை உருவாக்கி வச்சுட்டு போயிருவேன். மரங்களை வெட்டி அழிக்குறீங்க. நட்டுக்கிட்டு போயிடலாம். மழை , மணலை நான் எப்படி உருவாக்க முடியும். மாற்று பொருளாதார பெருக்கம் என்பது வேளாண்மையில் இருக்கு.

பாலின் சந்தை மதிப்பு தமிழ்நாட்டில் 3 லட்சம் கோடி. நீங்க பாலை எங்க இருந்து வாங்குறீங்க ? கடையிலிருந்து நீங்க வாங்கல, ஆந்திராவில் இருந்து வாங்குறோம்… கடையில இருந்து நீங்க வாங்குறீங்க. கடைக்கு எங்கிருந்து வருது ? ஆந்திராவில் இருந்து வருகிறது. அந்த முதலாளிகள் பண்ணை வைத்து, பால்லை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அவன் விலை வெளியேற்றினால் நீங்கள் விலை ஏற்ற வேண்டியது வருது.

நீங்கள் ஏன் மாடு வளர்க்கவில்லை ? பிரதமரே பேசுகிறார்கள் அல்லவா ?  நான் பேசும்போது சிரிக்கிறார்கள். ஆனால் பிரதமர்  பேசுகிறார்கள்… பாலில் பல கோடிக்கணக்காக பொருளாதாரம் இருக்கிறது, பாலை விற்றே நாம் தற்சார்பு பொருளாதாரம் அடைந்து விடலாம் என்கிறார். அவர் பேசும் போது கை தட்டினீர்கள். ஆனால் நான் பேசும் பொழுது,  உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |