விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 14,921 வாக்கு வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
பரபரப்பாக நடைபெற்று வரும் வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்த நிலையில் ,
திடீர் திருப்பமாக 7057 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவரை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். தற்பொழுது வாக்கு எண்ணிக்கை சற்றும் குறையாமல் சீறிப்பாயும் வகையில் 7,057 லிருந்து 14,921 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். அதன்படி திமுக வேட்பாளர் ஆனந்த் 3,28,618 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் 3,13,694 வாக்குகளும் பெற்று உள்ளனர்.