Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குப்பைகளுக்கு தீ வைத்த சமூக விரோதிகள்… புகை மூட்டத்தால் அவதிப்படும் பொதுமக்கள்..!!

நாகையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளில் சமூக விரோதிகள் தீ வைத்ததால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல்-சங்கமங்கலம் பகுதிக்கு இடையில் சாலையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கொட்டப்பட்டு வருகிறது. தற்காலிகமாக இந்த குப்பைகள் சாலை வரை கொட்டப்பட்டுள்ளது. இதில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிக அளவில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த புகையால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குப்பையில் சமூக விரோதிகள் தீ வைப்பதை தடுக்க வேண்டும் என்றும், சாத்தமங்கலம் செல்லும் சாலையோரத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்றும், குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் கொட்ட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |