பள்ளி மாணவர்கள் 5 பேர் புகைபிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ ஓன்று வைரலாகி வருகின்றது.
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.
பள்ளி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் ஒரு நான்கு , ஐந்து மாணவர்கள் ஒதுக்கு புறமாக இருக்கும் மறைவான இடத்தில் வைத்து புகைப்பிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகின்றது.
https://youtu.be/6xg7bb9QL2M