புகைபிடிப்பவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பினும், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மேலும் எப்படி பரவுகிறது? எதன் மூலமாகப் பரவுகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரத் துறையும் மக்களுக்கு தெரிவித்து, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழி முறைகளையும் கூறி வருகின்றது.
அந்த வகையில், தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், புகை பிடிபபர்களுக்கும் அதைவிட புகை பிடிப்பவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது எனில், அவர் சிகரெட்டை இழுத்து புகையை வெளியே விடும்போது அந்த புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் பொதுநலமாக சிந்தித்து ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் கொரோனாவை விரட்டுவதற்கான பணியில் ஈடுபடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.