Categories
மாநில செய்திகள்

புகைப்பழக்கம்: ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மரணம்… பாமக நிறுவனர் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் புகையிலை பழக்கத்தின் காரணமாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

இந்நிலையில் புகையிலை ஒழிப்பு நாளில், உலக சுகாதார அமைப்பு முன்வைத்த” புகைப்பழக்கத்தை கைவிட உறுதி எடுங்கள்” என்ற முழக்கத்தை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், புகைப்பழக்கத்தால் நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர் என்று தெரிவித்துள்ளார். புகையிலைப் பழக்கத்திலிருந்து மீண்டுவர, பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |