Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை விசாரணை செய்த போது இந்திராநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 57 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |