வெள்ளை கற்கள் கடத்தல் தொடர்பாக முதல் கட்டமாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் மாமங்கலத்தில் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளை கற்கள் கடத்துவது தொடர்பாக இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த கடத்தல் சம்பவத்தை தட்டி கேட்ட வாலிபர்கள் மீதும் கடத்தல் கும்பல் ஆனது தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள்.
முதற்கட்ட விசாரணையில் இளவரசன், பூபதி, அஜித், நவீன், கார்த்திக் உட்பட 6 பேர் மீது தற்பொழுது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே படுகாயம் அடைந்த ஆறு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களிடமும் பெரும் வாக்குமூலம் வைத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.