Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புடலங்காயில் இப்படி செய்யுங்க ….சூப்பர் சுவை ….

புடலங்காய் ரிங்க்ஸ்

தேவையான  பொருட்கள் :

புடலங்காய் –  1

அரிசி மாவு – 3/4 கப்

சோள மாவு – 3/4 கப்

மைதா மாவு – 3/4  கப்

மிளகாய்த்தூள் – சிறிதளவு

மிளகுத்தூள் –  1/4 டீஸ்பூன்

எண்ணெய் –  தேவைக்கேற்ப

ஓமம் – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

புடலங்காய் ரிங்ஸ்க்கான பட முடிவுகள்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில்  உப்பு, ஓமம் , மிளகாய்த்தூள், மிளகுத் தூள் , அரிசி மாவு , மைதா மாவு ,சோளமாவு மற்றும் தேவையான  தண்ணீர்  விட்டு, இட்லி மாவு போல் கரைத்துக்கொள்ள  வேண்டும். பின்னர் புடலங்காயை  வில்லைகளாக நறுக்கி மாவில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து , மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான புடலங்காய் ரிங்க்ஸ் தயார் !!!

Categories

Tech |