தேவையான பொருட்கள்
அவல் – 1 கிலோ
பொரிகடலை – 100 கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
மிளகு சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/2 தேக்கரண்டி
வத்தல் – 10
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் வேர்க்கடலையை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
- பாத்திரம் ஒன்றில் அவல், பொரிகடலை, வேர்க்கடலை, எள் என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு கடுகு வெடித்ததும் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரியவிடவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வதக்கிய கலவையை அவல் பொரிகடலை கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இரண்டு கலவைகளும் நன்றாக சேரும்படி கிளறவும்.
- இப்போது ருசிமிக்க கார அவல் பொறி ரெடி.