இங்கிலாந்தில், ஆர்டர் செய்த உணவில் நத்தை இருந்ததை பார்த்த பெண் அதிர்ந்து போனார்.
இங்கிலாந்தில் வசிக்கும் க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1 ஆம் தேதி அன்று புத்தாண்டு ஸ்பெஷலாக அவரின் காதலருக்கும் சேர்த்து ஒரு உணவகத்தில், சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். சாப்பாடு, வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கியுள்ளனர்.
அப்போது, க்ளோ-வின் உணவில் நத்தை இருந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனவர், சாப்பாட்டை தூக்கி எறிந்திருக்கிறார். அதற்கு முன்பு அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதுபற்றி அந்த உணவகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பின், அந்நிறுவனம் உணவிற்கான பணத்துடன் சேர்த்து, 40 பவுண்ட் பணம் கொடுத்ததோடு அவரிடம் மன்னிப்பு கேட்டது. எனினும், உணவில் நத்தை கிடந்ததைப் பார்த்து தான் அதிர்ந்து போனதாகவும், அதனை தன்னால் மறக்க முடியவில்லை என்றும் இனி அந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்யமாட்டேன் என்றும் க்ளோ சபதம் எடுத்திருக்கிறார்.