Categories
உலக செய்திகள்

8 அடி நீளமுடைய ராஜ நாகம்…. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய தந்தை…. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ….!!

வியட்நாமில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி 8 அடி நீளமுடைய ராஜநாகம் ஒன்று வேகமாக வந்து வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்வது தொடர்புடைய வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வியட்நாமில் த்ராங் என்னும் பகுதியிலுள்ள ஒரு வீட்டடின் முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது குழந்தைக்கு அருகே அவருடைய தாத்தாவும், தந்தையும் இருந்துள்ளார்கள்.

இதனையடுத்து குழந்தையின் தாத்தா வாசலிலிருந்து 8 அடி நீளமுடைய ராஜநாகம் ஒன்று வீட்டிற்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாசலில் நின்று கொண்டிருந்த குழந்தையின் தாத்தாவும், குழந்தையை தூக்கிக்கொண்ட குழந்தையின் அப்பாவும் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துள்ளார்கள்.

இந்நிலையில் மிகவும் வேகமாக வாசலிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த 8 அடி நீளமுடைய ராஜநாகம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் வெளியே சென்றுள்ளது. இது தொடர்புடைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |