பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்து விட்டது. அந்த பாம்பு மூதாட்டியை கடித்தவுடன் அவர் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர்.
அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பாம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.