Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பரிதாபமாக செல்லும் வழியிலேயே தங்கரத்தினம் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து களக்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |