அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Maeta என்ற இளம் பாடகி, ஒரு பாடல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த பாடலுக்காக உண்மையான பாம்புகளை அவர் மேல் போட்டனர். இந்நிலையில் திடீரென்று, ஒரு பாம்பு அவரின் தாடையை கடித்தது.
https://www.instagram.com/p/CXrFm1dJ7FU/
உடனே, அவர் பாம்பை பிடித்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த வீடியோ, தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து, Maeta தன் ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பதாவது, “உங்களுக்கு வீடியோ எடுக்க என்னவெல்லாம் செய்யவேண்டியுள்ளது பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.