பாம்பு கடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கோட்டத்தூர் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வித்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோருடன் வயலுக்கு சென்று வீடு திரும்பும் போது சிறுமி வித்யாவை பாம்பு ஒன்று கடித்துவிட்டது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வித்யா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.