Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுவரை சீரமைக்க சென்றவர்… திடீரென வந்து தீண்டிய பாம்பு… முதியவருக்கு நடந்த சோகம்..!!

பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனியில் 52 வயதான ஆபிரகாம் என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள சுவரில் காணப்பட்ட ஓட்டையை அடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஓட்டையில் இருந்து வந்த பாம்பு எதிர்பாராத விதமாக ஆபிரகாமை கடித்ததால் அவர் மயங்கி விழுந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆபிரகாமின் குடும்பத்தினர் மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் ஆபிரகாம் உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் முதியவரின் மகள் ஆஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |