ஈராக் நாட்டில் அரிய வகை நீர்பாம்பு ஒன்று இரட்டை தலையுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் குர்திஸ்தான் எனும் பகுதியில் உள்ள கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வரும் முகமது மக்மூத் என்பவர் கடந்த 30 வருடங்களாக அந்த கிராமத்தில் பண்ணை விவசாயம் செய்து வருகிறார். அந்த விவசாய நிலத்தில் இரட்டை தலையுடைய பாம்பு ஒன்று நீரோடையில் சென்றுள்ளது. மேலும் அந்த நீரோடையில் தண்ணீர் அதிகமாக இல்லை. ஆதலால் உயிருடன் அந்த பாம்பை பிடித்துக் கொண்டு முகமது மகமூத் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் பிடித்து சென்ற அந்த பாம்பு விஷமற்ற பாம்பு வகையை சேர்ந்தது, 8 அங்குலம் வளர கூடியது, 8 கிராம் எடையுடையது என்று கூறப்படுகிறது.
முகமது நீரோடையில் எடுத்துச்சென்ற அந்த பாம்பு நீர்வாழ் பாம்பு வகையை சேர்ந்தது, ஒரு வயது குறைவு உடையது, நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்டது என்றாலும் அவற்றால் அதிக வெப்பநிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. இரட்டை தலையுடன் கூடிய பாம்புகள் லட்சக்கணக்கான பாம்புகளில் ஒன்று என்ற கணக்கில் பிறக்கும். இவற்றுக்கு ஆயுளும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவியல் ஆய்வு தெரிவித்துள்ளது.