பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் அங்கு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடப்பா மாவட்டத்தில் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராமல் மனு தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது.
அந்த பாம்பை பார்த்ததும் வேட்பாளர்கள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் அலறியடித்து அந்த இடத்திலிருந்து ஓடி விட்டனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பாம்பு பிடிப்பவர் ஒருவரை அழைத்து வந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுவிட்டனர். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணியானது மீண்டும் தொடங்கிவிட்டது.