சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அணையின் கரையோரத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பதற்காக அங்கு தனி அறை ஒன்று உள்ளது.
இந்நிலையில் திடீரென மலைப்பாம்பு ஒன்று இந்த அறைக்குள் நுழைந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளம் உடைய அந்த மலைப்பாம்பை பிடித்து விட்டனர். அதன் பிறகு அதனை கெத்தை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர்.